மாநில செய்திகள்

"ஹெச். ராஜா மத்திய அரசின் பிரதிநிதி அல்ல" - அமைச்சர் சேகர் பாபு + "||" + H. Raja does not Represent the Government says Minister Sekar Babu

"ஹெச். ராஜா மத்திய அரசின் பிரதிநிதி அல்ல" - அமைச்சர் சேகர் பாபு

"ஹெச். ராஜா மத்திய அரசின் பிரதிநிதி அல்ல" - அமைச்சர் சேகர் பாபு
ஹெச்.ராஜா மத்திய அரசின் பிரதிநிதி அல்ல என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது,ஹெச்.ராஜா மத்திய அரசின் பிரதிநிதி அல்ல... அதோடுமட்டுமல்லாமல், அவர் ஒரு அரசாங்கமும் அல்ல. பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பிறகும் பல்வேறு வகையில் இந்து சமய அறநிலையத்துறையை அவர் தூற்றுவதும், பேச்சுக்கள் ஏச்சுவதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. 

அந்த ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் இந்து சமய அறநிலையத்துறை கவனத்தில் கொள்வதில்லை. மக்கள் தெளிவாக இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் எப்படி இருந்தது? தற்போது எப்படி இருக்கிறது? என்று மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். ஆகவே, அவர் (ஹெச்.ராஜா) எது செய்தாலும் நாங்கள் கவலைப்படுவதாக இல்லை’ என்றார்.