கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட டோனி சம்பளம் வாங்கவில்லை - பிசிசிஐ செயலாளர் தகவல் + "||" + MS Dhoni is not charging any honorarium for his services as the mentor of Indian team for the T20 World Cup

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட டோனி சம்பளம் வாங்கவில்லை - பிசிசிஐ செயலாளர் தகவல்

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட டோனி சம்பளம் வாங்கவில்லை - பிசிசிஐ செயலாளர் தகவல்
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட டோனி சம்பளம் வாங்கவில்லை என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17-ம் தேதி தொடங்க உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதற்கிடையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி நியமிக்கப்பட்டுள்ளார். டோனி இந்திய அணிக்கு ஆலோசனை வழங்க சம்பதித்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட டோனி சம்பளம் வாங்கவில்லை என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட மகேந்திரசிங் டோனி எந்தவித சம்பளமும் வாங்கவில்லை’ என்றார்.