தேசிய செய்திகள்

காஷ்மீரில் இரண்டு நாட்களில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி + "||" + Five terrorists were neutralised in two separate joint operations conducted on Monday and Tuesday

காஷ்மீரில் இரண்டு நாட்களில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி

காஷ்மீரில் இரண்டு நாட்களில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி
காஷ்மீரில் நேற்றும், இன்றும் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மேலும், பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவத்தினர் 5 பேர் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் நேற்றும், இன்றும் (2 நாட்களில்) பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 

நேற்றும், இன்றும் நடந்த இரண்டு வெவ்வேறு என்கவுண்டர்களில் மொத்தம் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுபவர்கள் சிறையில் தள்ளப்படுவர் - காஷ்மீர் பாஜக தலைவர் பேச்சு
பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுபவர்கள் சிறையில் தள்ளப்படுவர் என்று காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா தெரிவித்துள்ளார்.
2. காஷ்மீர்:பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் தோல்வியை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்...
உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை கொண்டாடிய காஷ்மீர் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. காஷ்மீர்: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினரின் நினைவிடத்தில் அமித்ஷா அஞ்சலி
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினரின் நினைவிடத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று அஞ்சலி செலுத்தினார்.
4. ஸ்ரீநகர்: தால் ஏரியில் படகுகளின் கண்கவர் அணிவகுப்பை கண்டு களித்த அமித்ஷா
ஸ்ரீநகரில் உள்ள பிரபல தால் ஏரியில் நடைபெற்ற கண்கவர் படகு அணிவகுப்பை உள்துறை மந்திரி அமித்ஷா கண்டுகளித்தார்.
5. காஷ்மீரில் குண்டுதுளைக்காத பாதுகாப்பு அரணை அகற்றி திறந்த மேடையில் பேசிய கவர்னர்
ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜம்மு-காஷ்மீர் கவர்னர் குண்டுதுளைக்காத பாதுகாப்பு அரணை அகற்றி திறந்த மேடையில் பேசத்தொடங்கினார்.