தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம் இருக்க வேண்டும்: பிரதமர் மோடி + "||" + PM Modi participated virtually in G20 Summit on Afghanistan today.

ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம் இருக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம் இருக்க வேண்டும்: பிரதமர் மோடி
ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி,

ஜி 20 மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதன் விவரத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நிர்வாகம் இருக்க வேண்டும்.  பயங்கரவாதத்தின் ஆதாரமாக ஆப்கானிஸ்தான் மாறிவிடக்கூடாது. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தங்கு தடையின்றி வழங்கப்பட வேண்டும். 

ஆப்கானிஸ்தானில் ஐக்கிய நாடுகள் அவை முக்கிய பங்கு வகிக்க பிரதமர் மோடி தனது ஆதரவை தெரிவித்தார். 

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில்  சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உருவாக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள  சூழலில் விரும்பும் படியான மாற்றத்தை கொண்டு வருவது கடினமாக மாறும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான் குறித்த ஜி20 நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு இத்தாலி ஏற்பாடு செய்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று  பிரதமர் நரேந்திர மோடி இதில் காணொலி வாயிலாக பங்கேற்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. மனித உரிமை பிரச்சினையை சிலர் தேர்ந்தெடுத்து அணுகுகின்றனர் ; பிரதமர் மோடி விமர்சனம்
குடிமக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது என பிரதமர் மோடி பேசினார்.
2. ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. நரேந்திர மோடி ஜனநாயகம் மிக்க தலைவர்: உள்துறை அமைச்சர் அமித்ஷா
ஜனநாயக முறைப்படியே தனது அமைச்சரவையை பிரதமர் மோடி நடத்துவதாக அமித்ஷா கூறினார்.
4. கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் படம் : மத்திய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றிருப்பது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
5. ஜப்பான் உடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்த விருப்பம், பிரதமர் நரேந்திர மோடி
ஜப்பானின் புதிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் இணைந்து கூட்டுறவை மேலும் வலுப்படுத்த பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்து உள்ளார்.