மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: திமுக தொடர்ந்து முன்னிலை + "||" + Tamil Nadu Local Body Election Result 2021

ஊரக உள்ளாட்சி தேர்தல்: திமுக தொடர்ந்து முன்னிலை

ஊரக உள்ளாட்சி தேர்தல்: திமுக தொடர்ந்து முன்னிலை
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை,

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது 74 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கையை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணித்து வருகின்றனர்.மற்ற மாவட்டங்களில் காலியாக இருந்த ஊராட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. இதுதவிர, 2874 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 119 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 5 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

மாலை  7  மணி வரை வெளியான முடிவுகளின் படி பெரும்பாலான இடங்களில் திமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

* 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 88 இடங்களில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. 2  இடங்கள் மட்டுமே அ.தி.மு.க. முன்னிலையில் உள்ளது.

*1380 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 353 இடங்களில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது . 59 இடங்களில் அ.தி.மு.க முன்னிலை வகிக்கிறது


தொடர்புடைய செய்திகள்

1. ஊரக உள்ளாட்சி தேர்தல் 5 மணி நிலவரம்: 9 மாவட்ட ஊராட்சிகளிலும் தி.மு.க.வே முன்னிலை
140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 75 இடங்களில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. 4 இடங்கள் மட்டுமே அ.தி.மு.க. முன்னிலையில் உள்ளது.
2. ஊரக உள்ளாட்சி தேர்தல் :அதிக இடங்களில் தி.மு.க முன்னிலை
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி தி.மு.க அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது.
3. வடிவேலு பட பாணியில் அனைத்து சின்னத்திலும் ஒரு குத்து
பல்வேறு ஒன்றியங்களில் வாக்குச்சீட்டில் உள்ள அனைத்து சின்னத்திலும் சிலர் தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
4. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 1:00 மணி முன்னிலை நிலவரம்
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஊராட்சி தலைவராகிறார் ஒரு சுயேட்சை வேட்பாளர்
5. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் - வாக்கு எண்ணிக்கை 12:00 மணி நிலவரம்
9 மாவட்டங்களில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு இதுவரை 159 பேர் தேர்வு, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,428 பேர் தேர்வு