சினிமா செய்திகள்

பழம்பெரும் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார் + "||" + Actor Srikanth, Jayalalithaa’s first hero, dies in Chennai

பழம்பெரும் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

பழம்பெரும் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த்  காலமானார்
பழம்பெரும் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த்(82) உடல்நலக்குறைவால் காலமானார்
சென்னை,

தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார். 1965ஆம் ஆண்டில் இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். 'வெண்ணிற ஆடை' படத்தில் டாக்டராக நடித்த இவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. 

சிவாஜி, கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகருடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீகாந்த். எம்.ஜி.ஆருடன் இணைந்து அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. 

 200- படங்களுக்கு மேல் நடித்துள்ள ஸ்ரீகாந்த் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் சிறப்பாக நடித்து பெயர் பெற்றார்.  சுமார் 50 படங்களில் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடித்துள்ளார்.  82-வயதான ஸ்ரீகாந்த் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.