தேசிய செய்திகள்

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் தேவை - மாநில தேர்தல் ஆணையர் + "||" + Election Commission Appeal Supreme Court to Seek Additional 4 Months to Contact Local Body Election in Puducherry State

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் தேவை - மாநில தேர்தல் ஆணையர்

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் தேவை - மாநில தேர்தல் ஆணையர்
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் தேவைபடுவதாக சுப்ரீம் கோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.
புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் குளறுபடிகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தேர்தலில் பிறப்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. 

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சிவா, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இட ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய அனுமதியளித்த நிலையில், இட ஒதுக்கீட்டை திரும்பப்பெற்றது ஏன்? என மாநில தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பியது. மேலும், அரசியலமைப்பு சட்ட விதிகளை பின்பற்றவில்லை எனக்கூறி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையில், கடந்த ஏப்ரல் மாதமே புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை கட்டாயம் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இட ஒதுக்கீடு குளறுபடி காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதங்கள் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் இன்று புதிய மனு தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்த அவகாசம் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது. மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.