மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் 90 வயது பெருமாத்தாள் வெற்றி - எதிர்த்தவர்களுக்கு டெபாசிட் காலி + "||" + 90-year-old Perumathal wins local elections - Deposit vacated for opponents

உள்ளாட்சி தேர்தலில் 90 வயது பெருமாத்தாள் வெற்றி - எதிர்த்தவர்களுக்கு டெபாசிட் காலி

உள்ளாட்சி தேர்தலில் 90 வயது பெருமாத்தாள் வெற்றி - எதிர்த்தவர்களுக்கு டெபாசிட் காலி
நெல்லை மாவட்டத்தில் தொண்ணூறு வயது மூதாட்டி ஒருவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நெல்லை

நெல்லை மாவட்டம்  பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவந்திப்பட்டியை சேர்ந்த பெருமாத்தாள்( வயது 90)  மூதாட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு  போட்டியிட்டார்.

இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இருவரை டெபாசிட் இழக்க செய்ததோடு மட்டுமல்லாமல்,  இரண்டாம் இடம் பிடித்த வேட்பாளரை விடவும் ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட  வெங்கடாம்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் 22 வயதே ஆன சாருகலா வெற்றி பெற்றுள்ளார்.

3336 வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் மூன்று வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்துள்ளார் பொறியியல் பட்டதாரியான சாருகலா.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரக உள்ளாட்சி தேர்தல்: 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 138 இடங்களை கைப்பற்றியது தி.மு.க
மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போது வரையிலான நிலவரப்படி, திமுக அதிகமான இடங்களை கைப்பற்றியுள்ளது.
2. உள்ளாட்சி தேர்தல் தி.மு.க வரலாற்று வெற்றி; 9 மாவட்ட முன்னிலை விவரங்கள்
வேலூரில் மொத்தமுள்ள 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியிடங்களில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
3. 5 ஆண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை 5 மாதத்தில் பெற்றுள்ளோம் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
ஐந்தாண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை ஐந்து மாதத்தில் பெற்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடந்துள்ளது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடந்துள்ளது என அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
5. ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்ற பாஜக சார்பு வேட்பாளர்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பாஜக சார்பு வேட்பாளர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார்.