தேசிய செய்திகள்

காந்தியை நீக்கி விட்டு சாவர்க்கரை தேசத்தந்தையாக மாற்றிவிடுவார்கள் - ஓவைசி விமர்சனம் + "||" + Asaduddin Owaisi says BJP will remove Mahatma Gandhi and make Savarkar the father of the nation

காந்தியை நீக்கி விட்டு சாவர்க்கரை தேசத்தந்தையாக மாற்றிவிடுவார்கள் - ஓவைசி விமர்சனம்

காந்தியை நீக்கி விட்டு சாவர்க்கரை தேசத்தந்தையாக மாற்றிவிடுவார்கள் - ஓவைசி விமர்சனம்
சாவர்க்கரை ஆங்கிலேயர்களிடம் கருணை மனு தாக்க செய்ய சொன்னது மகாத்மா காந்தி தான் என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

சாவர்க்கரின் வாழ்க்கை, வரலாறு தொடர்பான புத்தகம் நேற்று டெல்லியில் வெளியிடப்பட்டது. இந்த புத்தக வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

சாவர்க்கர் புத்த வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசுகையில், சாவர்க்கர் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. சிறையில் இருந்து விடுதலையாக ஆங்கிலேய அரசிடம் சாவர்க்கர் கருணை மனுக்களை தாக்கல் செய்ததாக மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வருகிறது. சாவர்க்கரை ஆங்கிலேயர்களிடம் கருணை மனு தாக்கல் செய்ய சொன்னது மகாத்மா காந்தி தான்’ என்றார்.

இந்நிலையில், ராஜ்நாத்சிங் கருத்துக்கு அனைத்து இந்திய மஜ்லிக் இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒவைசி கூறுகையில், அவர்கள் (பாஜக) திரித்துக்காட்டப்பட்ட தவறான வரலாற்றை முன்வைக்கின்றனர். இதேநிலை தொடர்ந்து நீடித்தால் மகாத்மா காந்தியை நீக்கி விட்டு சாவர்க்கரை தேசத்தந்தையாக மாற்றிவிடுவார்கள்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. 100 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டதாக பிரதமர் மோடி கூறினார் - ஓவைசி
இந்தியாவில் 100 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் என்று ஓவைசி கூறியுள்ளார்.