உலக செய்திகள்

நேபாளம்: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 28 பேர் பலி + "||" + At least 28 killed in Nepal bus crash

நேபாளம்: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 28 பேர் பலி

நேபாளம்: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 28 பேர் பலி
நேபாளத்தில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 28 பேர் உயிரிழந்தனர்.
காத்மண்டு,

நேபாளத்தின் லும்பினி மாகாணம் பேங்கி மாவட்டத்தில் இருந்து முகு மாவட்டத்திற்கு 45 பயணிகளுடன் முகு மாவட்டத்திற்கு நேற்று பஸ் சென்றுகொண்டிருந்தது. 

மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்சின் முன் டையர் திடீரென ’பஞ்சர்’ ஆனது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 28 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் தசாரா பண்டிக்கைக்காக சொந்த ஊர் சென்றுகொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. நேபாளத்தில் புதிதாக பதவி ஏற்ற தொழில் துறை மந்திரி 3 நாட்களில் ராஜினாமா
நேபாளத்தில் புதிதாக பதவி ஏற்ற தொழில் துறை மந்திரி பதவி ஏற்று 3 நாட்களில் ராஜினாமா செய்து உள்ளார்.
2. நேபாளம், வங்கதேசம், மியான்மருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி
நேபாளம், வங்கதேசம், மியான்மருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
3. ஓடுதளத்தை விட்டு விலகி புல்தரையில் சிக்கிய விமானம்
நேபாளத்தில் விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி புல்தரையில் சிக்கிய பரபரப்பு ஏற்பட்டது.
4. நேபாளத்தில் கனமழை நிலச்சரிவில் 6 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்து உள்ளனர்.
5. நேபாளத்தின் புதிய பிரதமராக ஷெர் பகதூர் தேவ்பாவை நியமிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் தேவ்பாவை நியமித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.