தேசிய செய்திகள்

போலீசார் சுற்றிவளைத்ததால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட குற்றவாளி + "||" + Surrounded by police, wanted criminal shoots himself dead in Rajasthan's Kotputli

போலீசார் சுற்றிவளைத்ததால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட குற்றவாளி

போலீசார் சுற்றிவளைத்ததால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட குற்றவாளி
போலீசார் சுற்றிவளைத்ததால் தேடப்பட்டு வந்த குற்றவாளி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜகுன்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோப் சந்த் என்ற சுக்லா. இவர் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. ஆனால், சுக்லா போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகவே வாழ்ந்து வந்தார். இதனால், சுக்லா பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு 5 ஆயிரம் பரிசுத்தொகை அளிக்கப்படும் என்று போலீசார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், சுக்லா ஜெய்ப்பூர் மாவட்டம் கோட்புட்லி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் குற்றவாளி ரோப் சந்த் என்ற சுக்லாவை சுற்றி வளைத்தனர். சக கூட்டாளிகள் தப்பியோடிய நிலையில் சுக்லா மட்டும் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.

போலீசார் தன்னை சுற்றிவளைத்ததை அறிந்த சுக்லா தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொண்ட குற்றவாளி சுக்லாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்காக உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னர் தற்கொலை செய்துகொண்ட குற்றவாளி சுக்லாவின் உடல் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமி பாலியல் வன்கொடுமை: 9 நாட்களில் தீர்ப்பு - குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 9 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2. செருப்பில் 'புளூ டூத்' - ஆசிரியர் தேர்வில் நூதன முறைகேடு முயற்சி
ஆசிரியர் தேர்வில் பங்கேற்ற நபரின் செருப்பில் ‘புளூ டூத்’ பொறுத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. சஞ்சு சாம்சன் அதிரடி: ஐதராபாத்துக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு
ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற 165 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. ராஜஸ்தானில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியது - அசோக் கெலோட் தகவல்
ராஜஸ்தானில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியதாக முதல்-மந்திரி அசோக் கெலோட் தெரிவித்துள்ளார்.
5. ராஜஸ்தானில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு
ராஜஸ்தானில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.