சினிமா செய்திகள்

தன்னை வீட்டை விட்டு வெளியே தள்ளியதாக பிரபல நடிகை பரபரப்பு புகார் + "||" + Meera Chopra seeks help as she gets duped by her interior designer; here's what she says

தன்னை வீட்டை விட்டு வெளியே தள்ளியதாக பிரபல நடிகை பரபரப்பு புகார்

தன்னை  வீட்டை விட்டு வெளியே தள்ளியதாக பிரபல நடிகை பரபரப்பு புகார்
தன்னை வீட்டை விட்டு வெளியே தள்ளி, மோசமாக பேசினார் என்று இன்டீரியர் டிசைனர் மீது நடிகை மீரா சோப்ரா போலீசில் புகார் அளித்துள்ளார்.
மும்பை
 
தமிழில், அன்பே ஆருயிரே, லீ, ஜாம்பவான், மருதமலை, காளை உட்பட பல படங்களில் நிலா என்ற பெயரில் நடித்தவர் நடிகை மீரா சோப்ரா. பின்னர் தனது  இயற் பெயரான மீரா சோப்ரா என்ற பெயரிலேயே தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் மும்பை அந்தேரி பகுதியில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்த வீட்டின் உள் கட்டமைப்புக்காக,  டிசைனர் ராஜிந்தர் திவானுடன் ரூ.17 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்தார். முதல் கட்டமாக ரூ.8 லட்சத்தைக் கொடுத்தார். பின்னர் அவர் பனாரஸில் நடந்த சினிமா படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார்.

15 நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்து புதிய வீட்டைப் பார்த்தபோது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மலிவான பொருள்களை உபயோகித்து அவர் உள்கட்டமைப்பு பணிகளை செய்து இருந்தார். இதனால் கோபமான அவர், அவரிடம் விசாரித்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி மீரா சோப்ரா கூறும்போது, கேள்வி கேட்டதும், என்னை என் வீட்டில் இருந்து வெளியே தள்ளிவிட்டு, இப்படிக் கேள்வி கேட்டால் வேலை செய்ய மாட்டேன் என மிரட்டினார். பிறகு அவருடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாகச் செய்தி அனுப்பினேன். அதற்கு அவர் மேலும் மோசமாகத் தாக்கிப் பேசத் தொடங்கினார்’ எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து மும்பை போலீஸ்நிலையத்தில் ராஜிந்தர் மீது மீரா சோப்ரா புகார் அளித்து உள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மீரா சோப்ரா தனது சமூக வலைதளத்தில் பெண்களின் பாதுகாப்பு பிரச்சினையை சுட்டிக்காட்டினார். முதலமைச்சர் அலுவலகத்தை  டுவிட் செய்து  எழுதி உள்ளார்.

நீங்கள் வசிக்கும் இடத்தில் பெண் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், ஆனால் சட்டத்தை இயற்றுபவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்?  தனியாக வாழும் ஒரு பெண்  கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும் என கூறி உள்ளார்.

மேலும் அவர் வீட்டு உள் அமைப்பு  டிசைனர் ஒருவரால் ஏமாற்றப்பட்டேன். ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் புகார் கொடுத்தேன்  ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மக்கள் சட்டமியற்றுபவர்களுக்கும் சமூகத்திற்கும் பதிலளிக்க வேண்டும். யாரும் அவர்களை கேள்வி கேட்கவில்லை என்றால், அது மீண்டும் மீண்டும் செய்ய அவர்களை ஊக்குவிக்கிறது.

இது தொடர்பாக நான் போலீசை அணுகினேன் இப்போது நான் சமூக ஊடகங்களில் இதை தெரிவித்து உள்ளேன். அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நான் நிறுத்தப் போவதில்லை என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்
பிரபல நடிகர் நெடுமுடி வேணு தனது 73 வயதில் காலமானார்
2. கருக்கலைப்பு வதந்திகள் எதுவும் என்னை பாதிக்காது - நடிகை சமந்தா
விவாகரத்தை தொடர்ந்து தன்னை சுற்றும் வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் சமந்தா தனது சமூக வலைதளத்தில் பதில் அளித்து உள்ளார்.
3. யோகி பாபுவுடன் ஜோடி சேரும் ஓவியா...!
குழந்தைகளுக்கான படம். அவர்களிடையே அறிவியலை வளர்க்கும் வகையில் படத்தின் கதை அமைந்துள்ளது.
4. நிழல் கதாபாத்திரத்தை நிஜமாக்கிய வில்லன் நடிகர்...?
நடிகர் சூர்யாவின் சிங்கம்- 2 திரைப்படத்தில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் டேனியின் கூட்டாளியாக மெல்வின் நடித்து உள்ளார்.
5. விஜய்க்கும் எனக்கும் பிரச்சினை இருப்பது உண்மைதான்...! ஆனால்...? - எஸ்.ஏ.சந்திரசேகர் பரபரப்பு வீடியோ
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.