மாநில செய்திகள்

மதுரையிலிருந்து திருப்பதிக்கு நவ.19-ம் தேதி முதல் விமான சேவை! + "||" + First flight to Tirupati on November 19!

மதுரையிலிருந்து திருப்பதிக்கு நவ.19-ம் தேதி முதல் விமான சேவை!

மதுரையிலிருந்து திருப்பதிக்கு நவ.19-ம் தேதி முதல் விமான சேவை!
நவம்பர் 19 ம் தேதி முதல் மதுரை விமான நிலையத்தில் இருந்து மதுரை – திருப்பதிக்கு தினமும் விமானம் இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை,

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் கொரோனா பரவல் காரணமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மாதந்தோறும் ரூபாய் 300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் மூலம் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அனுமதி அளித்து வருகிறது. முன்பதிவு டிக்கெட் இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. தினமும் சுமார் 20 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது.

கடந்த 7ம் தேதி 2021 ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா சிறப்பாக தொடங்கியது. இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு நவம்பர் 19 முதல் விமானங்கள் இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

மதுரையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை வழங்கப்பட வேண்டும் என திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் நீண்ட காலமாக வைத்திருந்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் முதல் முறையாக மதுரையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை வழங்குகிறது இந்த விமானம் மதியம் 3 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சரியாக 4:20 மணிக்கு திருப்பதியை சென்றடையும். அதை தொடர்ந்து 4.40 மணி அளவில் திருப்பதியில் இருந்து புறப்பட்டு மாலை 6.40 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மதுரையில் இருந்து திருப்பதிக்கு ரூபாய் 3,500 கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மதுரையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை என்பது திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு  மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.