தேசிய செய்திகள்

ஆர்யன்கான் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு + "||" + Adjournment of hearing on Aryankan bail petition

ஆர்யன்கான் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஆர்யன்கான் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஆர்யன்கான் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மும்பை,

மும்பை - கோவா சொகுசு கப்பலில் போதை விருந்தில் ஈடுபட்டதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை கடந்த வாரம் போதை பொருள் தடுப்பு பிரிவு கைது செய்தது.

தற்போது ஆர்யன் கான் நீதிமன்ற காவலில் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவர் ஜாமீன் கேட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். ஆனால் அது தங்களது எல்லைக்குட்பட்டது இல்லை என கூறி அவரது ஜாமீன் மனுவை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் அவர் ஜாமீன் கேட்டு மும்பை சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

இந்த மனு நீதிபதி வி.வி. பாட்டீல் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்யன்கான் தரப்பில் ஆஜரான வக்கீல், "ஆர்யன் கானிடம் இருந்து போதை பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. இருந்தும் அவர் கைது செய்யப்பட்டு ஒரு வாரம் காவலில் வைக்கப்பட்டு அவரிடம் 2 முறை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அவர் ஏன் இன்னும் ஜெயிலில் இருக்க வேண்டும்?." என்றார். மேலும் ஆர்யன்கான் மீதான ஜாமீன் மனுவை தனியாக விசாரிக்க வேண்டும் என கூறினார்.

அப்போது நீதிபதி இன்று முதல் ஆர்யன்கானின் மனுவை தனியாக விசாரிப்பதாக கூறினார். மேலும் ஆர்யன் கானின் ஜாமீன் மனு குறித்து நாளை பதில் தாக்கல் செய்யவும் போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டார்.

போதை பொருள் வழக்கில் கைதான அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா, நிபுர் சாதேஜ், மோகக் ஜெஸ்வால் உள்ளிட்டோரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இந்தநிலையில்,  போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஆர்யன்கான் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்டபின் ஜாமீன் மனுவை மும்பை ஐகோர்ட்டு நாளைக்கு ஒத்திவைத்தது.