தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு + "||" + Kerala reports 11,079 fresh COVID cases, 123 deaths

கேரளாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு

கேரளாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,079- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று  பாதிப்பால் ஒரே நாளில் 123 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் 48 லட்சத்து  20 ஆயிரத்து 698- ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 26,571 ஆக  உயர்ந்துள்ளது. 

கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பிறகு தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது கவனிக்கத்தக்கது. எனினும், நேற்று 7,823- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய மேலும் 89,995- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இளைஞர் காங்கிரசார் டார்ச் லைட் ஏந்தி பேரணி
லகிம்பூர் வன்முறையை கண்டித்து டெல்லியில் இளைஞர் காங்கிரசார் டார்ச் லைட் ஏந்தி பேரணியாக சென்றனர்.
2. டெல்லியில் மேலும் 31 பேருக்கு கொரோனா
டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது.
3. கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு "ஆரஞ்சு அலார்ட்" எச்சரிக்கை
அக்டோபர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4. கேரளாவில் 2.5 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது - கேரள சுகாதாரத்துறை மந்திரி
கேரளாவில் இதுவரை 2.5 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.
5. கேரளாவில் சுற்றுலா பயணிகளுக்கான சொகுசு கேரவன்கள் அறிமுகம் !
கேரளாவில் பாரத் பென்ஸ் நிறுவனத்தின் சுற்றுலா கேரவன் வாகனத்தை சுற்றுலாத்துறை மந்திரி அறிமுகப்படுத்தி வைத்தார்.