தேசிய செய்திகள்

பிரம்மோற்சவம் - 7வது நாள் விழா: சந்திரபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி + "||" + Prom - 7th day festival: Malayappa Swami in Chandraprabha vehicle

பிரம்மோற்சவம் - 7வது நாள் விழா: சந்திரபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி

பிரம்மோற்சவம் - 7வது நாள் விழா:  சந்திரபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி
ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் 7வது நாள் விழாவில் சந்திரபிரபை வாகனத்தில் கிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார்.
திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 7-வது நாளான இன்று காலை 9 மணிக்கு சூரிய நாராயணர் அவதாரத்தில், சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார்.

இரவு 7 மணி அளவில் வெண்ணிற மலர் மாலை அணிந்து சந்திர பிரபை வாகனத்தில், வெண்ணெய் தாழி கையில் ஏந்திய கிருஷ்ணர் அவதாரத்தில் மலையப்ப சுவாமி காட்சி அளித்தார்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோவில் வளாகத்தில் உள்ள கல்யாண உற்சவம் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக ஜீயர்கள் நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடி வேத பண்டிதர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து ஆராதனை செய்தனர்.