மாநில செய்திகள்

தென்காசியில் ஊராட்சி மன்ற தலைவராக கல்லூரி மாணவி தேர்வு + "||" + College student elected panchayat president in Tenkasi

தென்காசியில் ஊராட்சி மன்ற தலைவராக கல்லூரி மாணவி தேர்வு

தென்காசியில் ஊராட்சி மன்ற தலைவராக கல்லூரி மாணவி தேர்வு
தென்காசி மாவட்டம் வெங்காடம்பட்டி ஊராட்சி தலைராக 22 வயது கல்லூரி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி,

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்காடம்பட்டி  பஞ்சாயத்துக்கு உட்பட்ட லட்சுமியூர் கிராமத்தை சேர்ந்த ரவிசுப்ரமணியன் மகள் சாருகலா 21 வயது நிரம்பிய இளம் இன்ஜினியரிங் படிப்பு முடித்த பெண் வேட்பாளர் வெங்கடாம்பட்டி பஞ்சாயத்திற்கு போட்டியிட்டார் . அங்கு பதிவான வாக்குகள் நேற்று  எண்ணப்பட்ட நிலையில் சாருகலா 3336 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 796 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.  அவரை அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து அழைத்துச் சென்றனர்.

தந்தை ரவி சுப்பிரமணியன் செங்கல் சூளை நடத்தி வருகிறார். தாய் சாந்தி பூலாங்குளம் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். 

இளவயதிலேயே ஊராட்சி தலைவர் பதவிக்கு தேர்வான சாருகலாவை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். கிராமத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என கூறினார்.