மாநில செய்திகள்

“உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி” - கமல்ஹாசன் + "||" + Kamal Haasan thanks the people who voted in the local elections

“உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி” - கமல்ஹாசன்

“உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி” - கமல்ஹாசன்
உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு என்னும் பணிகள் நேற்று தொடங்கி நடைபெற்றது. பல பகுதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. மேலும், பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் திமுக முன்னிலை வகிக்கிறது.

இந்தத் தேர்தலில் சுயேச்சையாகக் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர் 110க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளனர். அதேநேரம் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இந்தத் தேர்தலில் தனித்து களமிறங்கின. இருப்பினும், 2 கட்சிகளாலும் இந்தத் தேர்தலில் ஒரு இடத்திலும் கூட வெல்ல முடியவில்லை. இது அக்கட்சி தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். 

‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ எனும் லட்சியக்கனலை இதயத்தில் ஏந்தி தேர்தலைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களைப் பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ள அவர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மக்கள் பணி இன்னும் வேகமாக தொடரும் என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.ஏ.எஸ் பணி விதிகளில் திருத்தம்: தமிழக அரசு எதிர்ப்பை வலுவாகப் பதிவு செய்ய வேண்டும் - கமல்ஹாசன் வலியுறுத்தல்
குடிமைப் பணி அதிகாரிகளின் பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
2. சிறுவன் புகழேந்தியை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் - கமல்ஹாசன்
சிறுவன் புகழேந்தியை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
3. ரஜினிகாந்திற்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து ரசிகர்களை மகிழ்விக்க மனதார வாழ்த்துவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
4. ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசன் ஜோடி தமன்னா?
‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க தமன்னாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. முன்னாள் கவர்னர் ரோசய்யாவின் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்
தமிழ்நாட்டின் முன்னாள் கவர்னர் ரோசய்யாவின் மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.