கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா + "||" + IPL Cricket Kolkata enters the final by beating Delhi

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா
இன்று நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷார்ஜா, 

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லீக் போட்டிகள் முடிந்து தற்போது ‘பிளே-ஆப்’ சுற்று நடந்து வருகிறது. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதையடுத்து நடந்த வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை விரட்டியடித்தது.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் டெல்லி கேப்பிட்டல்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் ஷார்ஜாவில் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய டெல்லி அணி, கொல்கத்தா அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் ரன்களை குவிக்க தடுமாறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது. அணியில் அதிகபட்சமாக தவான் 36 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களும் எடுத்தனர். வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து, 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷுப்மன் கில் 46 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 55 ரன்களும் சேர்த்து அணிக்கு பலமான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆனால் அடுத்து வந்தவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டம் டெல்லியின் பக்கம் சாய்ந்தது.

தினேஷ் கார்த்திக், இயன் மோர்க்கன், ஷகிப் அல் ஹசன், சுனில் நரேன் ஆகிய நான்கு பேரும் டக் அவுட் ஆகி வெளியேறினர். கடைசி ஓவரில் அஷ்வின் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியாக 2 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் ராகுல் திரிபாதி அடித்த சிக்சர் மூலம் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஐ.பி.எல். 2021 கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யும் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோத உள்ளது. இந்த ஆட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி
டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்துள்ளது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 164 ரன்கள் குவித்துள்ளது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2-வது இடத்தை பிடிக்குமா பெங்களூரு?
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டின் கடைசி லீக்கான இந்த ஆட்டத்தின் முடிவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: 86 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 171 ரன்கள் குவித்தது.