மாநில செய்திகள்

பெட்ரோல் விலை ரூ.102 ஆக உயர்வு! + "||" + Petrol price hiked to Rs 102

பெட்ரோல் விலை ரூ.102 ஆக உயர்வு!

பெட்ரோல் விலை ரூ.102 ஆக உயர்வு!
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து ரூ.102.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை, 

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது.  இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இதற்கிடையில், பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.79- ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 97.59 ரூபாய்க்கு விற்பனையானது.  

இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து 102.10 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து 97.93 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. 19 மாதங்களுக்கு பிறகு சென்னையில் இருந்து சீரடிக்கு நேரடி விமான சேவை
மராட்டிய மாநிலத்தில் புகழ்பெற்ற சாய்பாபா கோவில் இருப்பதால், அங்குள்ள சீரடி விமான நிலையம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
2. சென்னை, புறநகர் பகுதிகளில் இடியுடன் கனமழை; இன்றும் மழை நீடிக்கும் என ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. இன்றும் (திங்கட்கிழமை) மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
3. சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை
சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
4. சென்னை தம்பதி வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ரூ.21 ஆயிரம் கோடி ஹெராயின் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான சென்னை தம்பதி வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
5. சென்னையில் ‘மத்திய சதுக்கம்’ கட்டுமானப் பணிகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.