தேசிய செய்திகள்

இரண்டு நாள் பயணமாக ஜம்மு & காஷ்மீா், லடாக் செல்கிறார், ராம்நாத் கோவிந்த் + "||" + President Kovind begins his Ladakh, J&K tour today

இரண்டு நாள் பயணமாக ஜம்மு & காஷ்மீா், லடாக் செல்கிறார், ராம்நாத் கோவிந்த்

இரண்டு நாள் பயணமாக ஜம்மு & காஷ்மீா், லடாக் செல்கிறார், ராம்நாத் கோவிந்த்
இரண்டு நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஜம்மு காஷ்மீா் மற்றும் லடாக் செல்கிறாா்.
புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரா்களுடன் தசரா பண்டிகையை கொண்டாட உள்ளார். இதற்காக இருநாள் பயணமாக இன்று ஜம்மு காஷ்மீா் செல்கிறாா். லடாக் பகுதிக்குச் செல்லும் அவா் லே, சிந்துப் படித்துறையில் சிந்து தா்ஷன் பூஜை செய்கிறாா். பின்னா் மாலை உதம்பூரில் ராணுவ வீரா்களுடன்அவா் கலந்துரையாடுகிறார். 

அக்டோபா் 15-ம் தேதியன்று திராஸ் பகுதியில் உள்ள காா்கில் போா் நினைவுச் சின்னத்தில் ஜனாதிபதி மரியாதை செலுத்துவிட்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரா்களுடன் கலந்துரையாட உள்ளாா் என்று ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வருகையையொட்டி காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் மருத்துவ சேவைகளை விரிவுபடுத்துவது அவசியம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் மருத்துவ சேவைகளை விரிவுபடுத்துவது அவசியம் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.
2. ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அளிக்க மூத்த வக்கீல்கள் முன்வர வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்
ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அளிக்க மூத்த வக்கீல்கள் முன்வர வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.
3. மாநிலத்தின் பொன்விழாவையொட்டி இமாசலபிரதேச சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு
இமாசலபிரதேசம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடந்த சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்றார்.
4. உலகிலேயே உயரமான சாலை லடாக்கில் திறந்துவைப்பு
லடாக்கில் 18 ஆயிரத்து 600 அடியில் உலகிலேயே உயரமான சாலை திறந்துவைக்கப்பட்டது.
5. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அடுத்த வாரம் உத்தரபிரதேசம் பயணம்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வருகிற 26-ந் தேதி முதல் 4 நாட்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். அவர், லக்னோவில் உள்ள ராஜ்பவனில் தங்குவார்.