தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை + "||" + Prime Minister Modi prays for recovery of former Prime Minister Manmohan Singh

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 89), கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, குணம் அடைந்தார். 

இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக அவர் காய்ச்சலாலும், உடல் சோர்வாலும் அவதியுற்று வந்துள்ளார். இதையடுத்து அவர் நேற்று டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும், தற்போது அவரது உடல்நிலை ஸ்திரமாக இருப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மன்மோகன் சிங் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “டாக்டர் மன்மோகன் சிங் நல்ல உடல் நலத்துடன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் 75 சதவீதம் நுரையீரல் பாதித்த நோயாளி பூரண குணம்
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் 75 சதவீதம் நுரையீரல் பாதித்த நோயாளி பூரண குணம்.
2. கொரோனா பாதிப்பு; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய விரும்புகிறேன் - ராகுல் காந்தி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைந்து திரும்ப விரும்புகிறேன் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.