மாநில செய்திகள்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு + "||" + 23 Tamil fishermen captured by Sri Lankan Navy

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு

இலங்கை கடற்படையால்  தமிழக மீனவர்கள் 23  பேர் சிறைபிடிப்பு
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 23 பேரும், இன்று காலை இலங்கை, காரைநகர் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
நாகை

நாகை, அக்கரைப்பேட்டை, திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(48). இவரது சகோதரர் சிவனேசன் (42). இவர்களுக்குச் சொந்தமான  விசைப் படகுகளில் நாகை அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, ஆர்யநாட்டுத் தெரு மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சந்திரப்பாடி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 23 பேர் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

கடந்த 11-ஆம் தேதி நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்புக்குப் புறப்பட்ட அவர்கள், புதன்கிழமை இரவு இலங்கை, பருத்தித்துறைக்கு தென்கிழக்கே சுமார் 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 23 பேரும், இன்று காலை இலங்கை, காரைநகர் துறைமுகத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். அங்கு, மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், அவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்கு உள்படுத்தப்படுவர் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ராமேஸ்வரம் மீனவர்களின் வலைகளை அறுத்து எறிந்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
இலங்கை கடற்படையினர் கற்களை கொண்டு எறிந்தும், படகுகளின் இருந்த வலைகளை வெட்டி கடலில் வீசியும் மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.
2. தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
தமிழக மீனவர்களின் வலைகளை வெட்டி, சேதப்படுத்தி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து உள்ளனர்.
3. இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர் அவர்களது வலைகளையும் அறுத்து கடலில் வீசியுள்ளனர்.
4. இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததுடன் துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்த சம்பவம் மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
5. அரபிக்கடலில் மாயமான தமிழக மீனவர்கள் 9 பேரை மீட்க உடனடி நடவடிக்கை; பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்
அரபிக்கடலில் மீன்பிடிக்க சென்று மாயமான தமிழக மீனவர்கள் 9 பேரை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.