மாநில செய்திகள்

விதிமீறல்: ரெயில்வே பயணிகளிடம் 6 மாதத்தில் ரூ.35.47 கோடி அபராதம் + "||" + Violation: Railway passengers fined Rs 35.47 crore in 6 months

விதிமீறல்: ரெயில்வே பயணிகளிடம் 6 மாதத்தில் ரூ.35.47 கோடி அபராதம்

விதிமீறல்:  ரெயில்வே பயணிகளிடம் 6 மாதத்தில் ரூ.35.47 கோடி அபராதம்
கொரோனா விதிமீறலில் ஈடுபட்ட பயணிகளிடம் கடந்த 6 மாதத்தில் ரூ.35.47 கோடி அபராதம் வசூலாகி உள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

சென்னை,

நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.  இந்த நிலையில், ரெயிலில் பயணம் செய்யும் நபர்களுக்கு என வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து வெளியிடப்பட்டு உள்ளன.

அதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.  இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பயணிகளிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், நடப்பு ஆண்டு ஏப்ரலில் இருந்து அக்டோபர் வரையிலான காலகட்டங்களில், பயணத்தின்போது கொரோனா விதிமீறலில் ஈடுபட்ட பயணிகளிடம் ரூ.35.47 கோடி அபராதம் வசூலாகி உள்ளது என தெரிவித்து உள்ளது.

இவற்றில் முக கவசம் அணியாததற்காக ரூ.1.63 கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள்: 3 மணி நேரத்தில் ரூ.7 லட்சம் அபராதம் விதிப்பு
சென்னை திருவொற்றியூரில் வாகன சோதனையின் போது அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
2. சிறப்பு வாகன சோதனையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டியவர்களுக்கு ரூ.2.80 லட்சம் அபராதம்
சிறப்பு வாகன சோதனையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டியவர்களுக்கு ரூ.2.80 லட்சம் அபராதம்.
3. மீஞ்சூர் பேரூராட்சியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
மீஞ்சூர் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து முககவசம் அணியாதவர்களிடம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தார்.
4. திருமழிசை பகுதிகளில் முக கவசம் அணியாத கடைக்காரர்கள், பொதுமக்களுக்கு அபராதம்
திருமழிசை பகுதிகளில் பேரூராட்சி உதவி இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டு முக கவசம் அணியாத கடைக்காரர்கள், பொதுமக்களுக்கு அபராதம் விதித்தார்.
5. பொள்ளாச்சி அருகே அனுமதி பெறாமல் படப்பிடிப்பு: சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு ரூ.19 ஆயிரம் அபராதம்
அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதால் சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு ரூ.19 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் இயக்குனர் உள்பட 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.