உலக செய்திகள்

பிலிப்பைன்சில் கடுமையான சூறாவளி புயல்; 19 பேர் பலி + "||" + Severe cyclone in the Philippines; 19 killed

பிலிப்பைன்சில் கடுமையான சூறாவளி புயல்; 19 பேர் பலி

பிலிப்பைன்சில் கடுமையான சூறாவளி புயல்; 19 பேர் பலி
பிலிப்பைன்சில் ஏற்பட்ட கடுமையான சூறாவளி புயலுக்கு 19 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
லூஜன்,


பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கே லூஜன் தீவு பகுதியில் கடந்த வாரம் கொம்பாசு என்ற சூறாவளி புயல் உற்பத்தியானது.  மேரிங் என்றும் அழைக்கப்படும் இந்த புயலின் பாதிப்புக்கு இதுவரை 19 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதுதவிர 13 பேர் காணாமல் போயுள்ளனர்.  புயலால் 325 வீடுகள் சேதமடைந்து உள்ளன.  அவற்றில் 89 வீடுகள் பராமரிப்பு செய்ய முடியாத நிலைக்கு சென்று விட்டன என தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண் கவுன்சில் தெரிவித்து உள்ளது.

இந்த சூறாவளி புயலால், மொத்தம் 50 ஆயிரத்து 40 வீடுகளில் வசிப்பவர்கள் அல்லது 1 லட்சத்து 94 ஆயிரத்து 677 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சூறாவளி புயலானது பிலிப்பைன்சை விட்டு நகர்ந்து சென்று விட்டாலும் தொடர்ச்சியாக கனமழை பெய்யும் என அச்சுறுத்தலும் ஏற்பட்டு உள்ளது என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

புயல் எதிரொலியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 2 நாட்களுக்கு மித மழை பெய்ய கூடும்
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மித மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
2. மேற்கு வங்காளம்: வரும் நவம்பர் 16ல் இருந்து 9-12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு
மேற்கு வங்காளத்தில் வருகிற நவம்பர் 16ந்தேதியில் இருந்து 9-12ம் வகுப்பு பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும்.
3. வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
4. மெகா முகாம்; தமிழகத்தில் செலுத்திய மொத்த தடுப்பூசி 1.32 கோடி
தமிழகத்தில் 6 நாட்கள் நடந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் 1.32 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மருத்துவ துறை தெரிவித்து உள்ளது.
5. தற்போது மன்மோகன் சிங்கின் உடல்நிலை எப்படி உள்ளது?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை பற்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் தெரிவித்து உள்ளது.