உலக செய்திகள்

தைவான் கட்டிட தீ விபத்து; 46 பேர் பலி + "||" + Taiwan building fire; 46 people were killed

தைவான் கட்டிட தீ விபத்து; 46 பேர் பலி

தைவான் கட்டிட தீ விபத்து; 46 பேர் பலி
தைவான் நாட்டில் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தைபே,

தைவான் நாட்டின் தெற்கே காவோசியங் நகரில் 13 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று உள்ளது.  இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த தீயானது அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியுள்ளது.  இதனால், கரும்புகை பரவி வான் வரை சென்றது.  இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் உடனடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  எனினும், புகை மூட்டம் மற்றும் தீ பரவல் கடுமையாக இருந்தது தீயணைப்பு பணிக்கு இடையூறாக இருந்தது.

முதற்கட்ட தகவலின்படி, 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.  இதுதவிர, மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 55 பேரில் 14 பேர் உயிரிழந்தனர்.  இன்று மாலைக்குள் கட்டிடம் முழுவதும் தேடி, மீட்பு பணியை துரிதப்படுத்த அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கடலுார்: டெங்கு பாதித்த மாணவர் பலி
கடலுாரில் டெங்கு காய்ச்சல் பாதித்த மாணவர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.
2. டெல்லியில் 723 பேருக்கு டெங்கு பாதிப்பு; முதன்முறையாக ஒருவர் பலி
டெல்லியில் டெங்கு பாதிப்புக்கு முதன்முறையாக இன்று ஒருவர் பலியாகி உள்ளார். மொத்தம் 723 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
3. பாகிஸ்தான்: வீடு தீ பிடித்து ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் நாட்டில் வீடு தீ பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.
4. திருமண மண்டபத்தில் தீ விபத்து
வத்திராயிருப்பு அருகே உள்ள திருமண மண்டபத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
5. பவானி அருகே மின்னல் தாக்கி குடோனில் பயங்கர தீ விபத்து; கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மஞ்சள் எரிந்து நாசம்; 18 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
பவானி அருகே மின்னல் தாக்கியதில் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மஞ்சள் எரிந்து நாசம் ஆனது. 18 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.