மாநில செய்திகள்

ரூ.1.21 கோடி கட்ட தவறியதால் மதுவந்தியின் வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் சீல்... + "||" + For failing to pay Rs 1.21 crore Bank officials seal Madhuvanthi's house ...

ரூ.1.21 கோடி கட்ட தவறியதால் மதுவந்தியின் வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் சீல்...

ரூ.1.21 கோடி கட்ட தவறியதால்  மதுவந்தியின் வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் சீல்...
பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் பல மாதங்களாக வட்டி பணம் கட்டச் சொல்லியும் பணம் கட்டாமல் மதுவந்தி இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.
சென்னை

மதுவந்தி சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி, 2வது குறுக்குத் தெருவில் உள்ள ஆசியானா அப்பார்ட்மென்டில் உள்ள சொந்த வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார்.இவர் வீடு வாங்குவதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

அதன் பின்னர் சில மாதங்கள் தவணை முறையாக காட்டியுள்ளார். ஆனால், அதன்பிறகு தொடர்ந்து பணம் கட்டாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் பல மாதங்களாக வட்டி பணம் கட்டச் சொல்லியும் பணம் கட்டாமல் மதுவந்தி இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து வங்கி அதிகாரிகள் வட்டியுடன் அசலை சேர்த்து ரூ1,21,30,867 பணம் கட்டச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.ஆனால், அதற்கு உரிய பதில் சொல்லாமல் மதுவந்தி இருந்ததால், அந்த நிதி நிறுவனம்  மெட்ரோபாலிட்டன் அல்லிகுளம் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து வழக்கறிஞர், கமிஷன் வினோத்குமார் முன்னிலையில் மதுவந்தியின் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்போடு சீல் வைக்கப்பட்டு வீட்டு சாவி பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. தாம்பரம் ரெயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி கொலை...! காதல் விவகாரமா...?
கடந்த 2016-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வாலிபர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார்.
2. தாம்பரம் ரெயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை
தாம்பரம் ரெயில் நிலைய வாசலில் தனியார் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
3. சென்னை: திருமண மண்டபத்தில் வெடித்துச் சிதறிய மின்சாரப்பெட்டி- மயங்கி விழுந்த மணமகள்
திருமண மண்டபத்தில் மின்சாரப் பெட்டி திடீர் என வெடித்துச் சிதறியது. இதனால் மண்டபத்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
4. மெட்ரோ ரெயில் பணிகள்:கோடம்பாக்கம் - ஆற்காடு சாலையில் நாளை முதல் ஓராண்டிற்கு போக்குவரத்து மாற்றம்..!
கோடம்பாக்கம் - ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், இது ஓராண்டுக்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. சென்னை வண்ணாரபேட்டையில் மழைநீர் சேகரிப்பு குழாய் சீரமைப்பில் மண் சரிந்து விபத்து
மழைநீர் சேகரிப்பு குழாய் சீரமைப்பில் மண் சரிந்து விழுந்தது இதில் 3 பேர் சிக்கி கொண்டனர். இதில் 2 பேர் மீட்கப்பட்டனர்.