மாநில செய்திகள்

காஞ்சீபுரம் டாஸ்மாக் ஊழியர் படுகொலை; ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு + "||" + Kanchipuram Tasmac employee murdered; Rs 10 lakh relief notice

காஞ்சீபுரம் டாஸ்மாக் ஊழியர் படுகொலை; ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

காஞ்சீபுரம் டாஸ்மாக் ஊழியர் படுகொலை; ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் ஊழியர் படுகொலை சம்பவத்தில் அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
காஞ்சீபுரம்,


காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் கடந்த 4ந்தேதி இரவு டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது மர்ம கும்பல் அவர்களை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டது. இதில் டாஸ்மாக் விற்பனையாளர் துளசிதாஸ் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த மற்றொரு ஊழியருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்துக்கு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் கடந்த 5ந்தேதி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், காஞ்சீபுரத்தில் கொள்ளையர்கள் தாக்குதலால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர் துளசிதாஸ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.  இதேபோன்று அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்து உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை
கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் சென்று வழங்கினர்.
2. அருண்ராஜா காமராஜ் - உதயநிதி கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு அறிவிப்பு
2019-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆர்ட்டிகில் 15’ படத்தின் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.
3. காஷ்மீரில் தொழிலாளர்கள் படுகொலை; ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளால் உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்கு பீகார் முதல் மந்திரி ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளார்.
4. காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான தேதி பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
5. அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட மாநாடு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அ.தி.மு.க.வின் பொன் விழாவையொட்டி பிரமாண்ட மாநாடு நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.