மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி : பா.ஜ.க வரவேற்பு + "||" + Tamilnadu BJP president Annamalai welcomes State decision regarding the opening of worship places

தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி : பா.ஜ.க வரவேற்பு

தமிழகத்தில் அனைத்து  நாட்களிலும் வழிபாட்டு தலங்களை  திறக்க அனுமதி : பா.ஜ.க வரவேற்பு
தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அளித்த அனுமதிக்கு பா.ஜ.க வரவேற்பு தெரிவித்து உள்ளது.
சென்னை 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.  தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து வந்தது.

அதனால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு இன்று அறிவித்தது.

அதன்படி   தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் அனைத்து  நாட்களிலும் வழிபாட்டு தலங்களை  திறக்க அனுமதி அளித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப வெளியாகி உள்ள இந்த அறிவிப்பை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மகாளய அமாவாசை: திதி, தர்ப்பணம் செய்யும் உரிமையை மறுப்பதா? அண்ணாமலை கண்டனம்
மகாளய அமாவாசை: திதி, தர்ப்பணம் செய்யும் உரிமையை மறுப்பதா? அண்ணாமலை கண்டனம்.
2. ஜி.எஸ்.டி. கூட்டத்தில் நிதி அமைச்சர் ஏன் பங்கேற்கவில்லை? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்
ஜி.எஸ்.டி. கூட்டத்தில் நிதி அமைச்சர் ஏன் பங்கேற்கவில்லை? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்.
3. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் அண்ணாமலை நம்பிக்கை
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
4. வீட்டு வாசல்கள் முன்பு வழிபாடு: தமிழக பா.ஜ.க. சார்பில் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள்
வீட்டு வாசல்கள் முன்பு வழிபாடு: தமிழக பா.ஜ.க. சார்பில் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் அண்ணாமலை அறிவிப்பு.
5. எந்த அரசு தடுத்தாலும் ‘விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும்’ பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
‘‘எந்த அரசு தடுத்தாலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும்’’ என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.