உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 கோடியை தாண்டியது + "||" + World wide covid 19 updates on oct 15

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 கோடியை தாண்டியது

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 கோடியை தாண்டியது
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வியாபித்துவிட்டது. தொற்று பரவத்தொடங்கி இரண்டு ஆண்டுகள் நெருங்கிவிட்ட நிலையிலும் தொற்று பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும்  கொரோனா வைரஸ்  பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை.

இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21.76 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலால் இதுவரை 48.96 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவியவர்களில் 1.77 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 81 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் 29 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு; விடுதிக்கு சீல்
கர்நாடகாவில் தனியார் நர்சிங் பள்ளியை சேர்ந்த 29 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் விடுதி மூடப்பட்டு உள்ளது.
2. இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
டெல்லியில் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
3. கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பினார் கமல்ஹாசன்; வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!
'தொற்று தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன்.எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன்’ என டுவீட்.
4. டெல்லியில் மேலும் 54 பேருக்கு கொரோனா
டெல்லியில் மேலும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. சென்னையில் 128 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்து 128 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.