தேசிய செய்திகள்

கேரளாவில் கனமழை; 5 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கை + "||" + Heavy Rainfall Warning In Kerala; Red Alert In 5 Districts

கேரளாவில் கனமழை; 5 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கை

கேரளாவில் கனமழை; 5 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கை
அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, கேரளத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது
திருவனந்தபுரம், 

அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, கேரளத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில்,  கேரளாவில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பத்தினம் திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திரிசூர், ஆகிய 5 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல்,  திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், நீர் நிலைகளுக்கு அருகில் மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகம் எச்சரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று குறைந்தது
தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 44,638- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
2. கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
கேரளாவில் தொடரும் கனமழையால் கோழிக்கோடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3. கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் : கேரளாவில் யானைகள் உயிரிழப்பு அதிகரிப்பு
நவம்பர் 2018 ஆம் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பில் கேரளாவில் 519 யானைகள் இருந்துள்ளன .தற்போது அந்த எண்ணிக்கை 453 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,972- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளா: ஆர்.எஸ்.எஸ் தொண்டர் படுகொலை - பி.எப்.ஐ நிர்வாகி கைது
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.