உலக செய்திகள்

இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 43,423 பேருக்கு தொற்று + "||" + Britain records 43,423 new COVID cases, 148 deaths

இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 43,423 பேருக்கு தொற்று

இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 43,423 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,423 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டன்,

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,423 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 84,04,469 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 148 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 527 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 40,606 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 68 லட்சத்து 79 ஆயிரத்து 735 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 13,86,207 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் புதிதாக 45,691 பேருக்கு கொரோனா பாதிப்பு...!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,691 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் புதிதாக 699 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் இன்று மேலும் 699 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. பிரிட்டன், கனடாவில் இருந்து மத்திய பிரதேசம் வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு
பிரிட்டன், கனடாவில் இருந்து மத்திய பிரதேசம் வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரமாக குறைந்தது
558 நாட்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
5. நாளை நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட்: 'ஆஷஸ்' பெயர் காரணம் தெரியுமா.?
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது.