தேசிய செய்திகள்

இம்பாலில் தடுப்பூசி போட்டால் டி.வி., செல்போன் பரிசு + "||" + TV, cell phone gift for vaccination in Imphal

இம்பாலில் தடுப்பூசி போட்டால் டி.வி., செல்போன் பரிசு

இம்பாலில் தடுப்பூசி போட்டால் டி.வி., செல்போன் பரிசு
இம்பாலில் கொரோனா தடுப்பூசி போட்டால் குலுக்கல் முறையில் டி.வி., செல்போன் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வத்தை கிளர்ந்தெழச்செய்வதற்காக இம்பால் மேற்கு மாவட்ட நிர்வாகம் பரிசுத்திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

இந்த மாவட்டத்தில் வரும் 24-ந் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ந் தேதி வரை 3 மெகா தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறவர்களுக்கு குலுக்கல் முறையில் கவர்ச்சிகரமான பரிசுகளை வழங்கப்போவதாக அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பரிசாக கலர் டி.வி., செல்போன், போர்வைகள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசுளும் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் இம்பால் மேற்கு மாவட்டத்தில்தான் அதிக மக்கள் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. 11-வது மெகா முகாம்: 12 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் நடைபெற்ற 11-வது மெகா தடுப்பூசி முகாமில் 12 லட்சத்து 1,832 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சென்னையில் 1 லட்சம் பேர் போட்டுக்கொண்டனர்.
2. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால், மதுபானத்துக்கு 10 சதவீதம் தள்ளுபடி..!
மத்தியபிரதேச மாநிலம் மந்த்சவுர் மாவட்டத்தில் இருக்கும் சாராய கடைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 10 சதவீதம் தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3. நியூசிலாந்துக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு பயணிகள் நியூசிலாந்துக்குள் நுழையலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
4. இங்கிலாந்தில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இன்று முதல் பயண அனுமதி...!!
இங்கிலாந்தில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இன்று முதல் பயண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
5. இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி குடும்பத்தினர் அதிர்ச்சி
காஞ்சீபுரத்தில் உயிரிழந்தவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்ததையடுத்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.