சினிமா செய்திகள்

'எனக்கும் கொரோனா' இருமிக்கொண்டே வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை + "||" + The famous actress who released the video with 'Corona for me too' with coughs

'எனக்கும் கொரோனா' இருமிக்கொண்டே வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை

'எனக்கும் கொரோனா' இருமிக்கொண்டே வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை
தடுப்பூசி போட மாட்டேன் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை நம்புவதாகவும் அது தன்னை மீட்க உதவும் என்றும் நடிகை கூறி உள்ளார்.
கோவா,

நேற்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அனைவருக்கும் வணக்கம். எனக்கு ஏன் இதுவரை கொரோனா வரவில்லை என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இப்போது நான் கொரோனாவைப் பெற்றிருக்கிறேன் என்று தோன்றுகிறது. கொரோனா பாசிட்டிவ் என சோதனையில் தெரிய வந்துள்ளது.

பூஜா பேடி தடுப்பூசி போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் கூறும் போது, தடுப்பூசிகள் வெளிவருவதற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 99 சதவீதம் பேர் உயிர் பிழைத்ததை பற்றி நாம் அறிவோம். மேலும், தடுப்பூசி போட்ட 99 சதவீதம் பேரும் பிழைத்திருக்கிறார்கள். இதன் மூலம் நமக்கு தேவை எச்சரிக்கையே அன்றி பீதி அல்ல. உண்மை என்னவென்றால், நம்மிடம் கருவிகள் மற்றும் உதவிகள் உள்ளன. எனவே நாம் பயப்படத் தேவையில்லை.

மேலும் அவர், தன்னுடைய இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை நம்புவதாகவும் அது தன்னை மீட்க உதவும் என்றும் கூறினார். மேலும் அவர் இது தன்னுடைய தனிப்பட்ட  தேர்வு என்றும் ஒவ்வொருவரும், தங்கள் சொந்த தேர்வுகளை மேற்கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

பூஜா பழங்கள், ஆவி பிடித்தல் போன்றவற்றை எடுத்துக்கொள்வதாக கூறினார். மேலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தனது ரசிகர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
புதுச்சேரியில் புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. நீலகிரி பள்ளி மாணவிகள் 21 பேருக்கு கொரோனா; விடுதிக்கு சீல்
நீலகிரியில் பள்ளி மாணவிகள் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
3. மராட்டியத்திற்கு வந்த 6 பயணிகளுக்கு ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உறுதி
தென்ஆப்பிரிக்கா அல்லது ஒமிக்ரான் ஆபத்து நிறைந்த பிற நாடுகளில் இருந்து மராட்டியத்திற்கு வந்த 6 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
4. கொரோனா பாதிப்பு : ராணுவத்தில் 190 பேர் உயிரிழப்பு - நாடாளுமன்றத்தில் தகவல்
கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஆரம்பித்த நேரம் முதற்கொண்டு, தடுப்பு பணியில் ராணுவம் தீவிரமாக பணியாற்றியது.
5. கர்நாடகாவில் அறிகுறி இல்லாமல் 13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கர்நாடகாவில் அறிகுறி இல்லாமல் 13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.