உலக செய்திகள்

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொரோனாவுக்கு பலி + "||" + Colin Powell, First Black US Secretary Of State, Dies Of Covid

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொரோனாவுக்கு பலி

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொரோனாவுக்கு பலி
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொலின் பவுல் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தார்.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் 65-வது வெளியுறவுத்துறை மந்திரியாக செயல்பட்டவர் கொலின் பவுல். ஆப்பிரிக்க-அமெரிக்கரான இவர் 2001 முதல் 2005 வரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றியுள்ளார். இவர் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த காலத்தில் தான் ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தது. கொலின் பவுல் அமெரிக்கா முப்படைகளின் தலைமை தளபதியாகவும் செயல்பட்டுள்ளார். 

84 வயதான கொலின் பவுல் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டுள்ளார். 
 
இதற்கிடையில், கொலின் பவுலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கொலின் பவுல் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொலின் பவுல் உயிரிழந்த நிகழ்வுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் 11 மாகாணங்களில் “ஒமைக்ரான்” கொரோனா பரவல்
அமெரிக்காவில் குறைந்தபட்சம் 11 மாகாணங்களில் ஒமைக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. அமெரிக்காவில் நிதி பற்றாகுறையில் தவிக்கும் பாகிஸ்தான் தூதரகம்
அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் கடுமையான நிதி பற்றாகுறையில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3. அமெரிக்காவில் நிதி பற்றாகுறையில் தவிக்கும் பாகிஸ்தான் தூதரகம்
அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் கடுமையான நிதி பற்றாகுறையில் சிக்கியிருப்பதாகவும், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
4. அமெரிக்கா: பாம்பை விரட்ட முயன்று வீட்டை எரித்த நபர்..!
அமெரிக்காவில் பாம்பை புகை வைத்து விரட்ட முயன்ற போது எதிர்பாராதவிதமாக வீடு எரிந்ததால், வீட்டின் உரிமையாளர் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
5. அமெரிக்காவில் ஐ.நா. தலைமையகத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவரால் பரபரப்பு
அமெரிக்காவில் ஐ.நா. தலைமையகத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.