உலக செய்திகள்

இங்கிலாந்தில் மனைவியை கொலை செய்த இந்திய கணவருக்கு ஆயுள் தண்டனை + "||" + Indian origin man jailed by UK court for killing, dumping wife's body

இங்கிலாந்தில் மனைவியை கொலை செய்த இந்திய கணவருக்கு ஆயுள் தண்டனை

இங்கிலாந்தில் மனைவியை கொலை செய்த இந்திய கணவருக்கு ஆயுள் தண்டனை
இங்கிலாந்தில் மனைவியை கொலை செய்து உடலை சாலையில் வீசிச்சென்ற இந்திய கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் லெய்செண்டர் நகரில் இந்திய தம்பதிகளான காஷிஷ் அகர்வால் மற்றும் அவரது மனைவி கீதிகா கொயல் வசித்து வந்தனர். 29 வயதனான கீதிகா கொயலை கடந்த மார்ச் 3-ம் தேதி அவரது கணவர் காஷிஷ் அகர்வால் குத்திக்கொலை செய்துள்ளார். மனைவியை கொலை செய்த அகர்வால் அவரது உடலை உபிங்கம் கிளோஸ் என்ற பகுதியில் உள்ள சாலையோரம் வீசிச்சென்றுள்ளார்.

இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மார்ச் 6-ம் தேதி காஷிஷ் அகர்வாலை கைது செய்தனர். விசாரணையில் கீதிகாவை அவரது கணவர் அகர்வால் கொலை செய்தது உறுதியானது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், மனைவி கீதாகா கொயலை அவரது கணவர் காஷிஷ் அகர்வால் கொடூரமாக குத்திக்கொலை செய்தது உறுதியானது. மனைவியை கொலை செய்த அகர்வாலுக்கு ஆயுள் தண்டனை ( குறைந்தது 20 ஆண்டுகள் 6 மாதங்கள்) விதித்து இங்கிலாந்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, குற்றவாளி காஷிஷ் அகர்வால் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலகின் புதிய குடியரசு நாடாக மாறிய பார்படாஸ்.. பிரிட்டிஷ் அரசாட்சிக்கு முற்றுப்புள்ளி!
பிரிட்டிஷ் அரசாட்சியின் கீழ் அதிகார மையத்தின் தலைமை பொறுப்பு செயல்பட்டு வந்த நிலையில், தற்போது சுய அதிகாரம் பெற்ற தனி குடியரசு நாடாக மாறி உள்ளது பார்படாஸ் தீவு.
2. இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலியிலும் பரவியது ‘ஒமிக்ரான்’ வைரஸ்..!
இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி என புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பரவத்தொடங்கி உள்ளது.
3. பேருந்து பயணம்,கடைகளுக்கு செல்லும் போது மாஸ்க் கட்டாயம்; இங்கிலாந்து அறிவிப்பு
இங்கிலாந்தில் பேருந்து பயணம், கடைகளுக்கு செல்லும் போது மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு
4. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது..!!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47,240 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இங்கிலாந்தில் மேலும் 43,676 பேருக்கு கொரோனா பாதிப்பு...!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,676 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.