உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மாஸ்கோவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பு + "||" + Moscow Orders Fresh Virus Restrictions As Deaths Roar

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மாஸ்கோவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பு

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மாஸ்கோவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பு
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ,

ரஷியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. அந்நாட்டில் கொரோனா பாதிப்பிற்கு நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 1,015 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், ரஷியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையிலும் மக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டாததே ரஷியாவில் வைரஸ் பரவல் அதிகரிக்க காரணம் என மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

ஸ்புட்னிக் வி என்ற உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை நாங்கள் தான் உருவாக்கினோம் என்று ரஷிய அறிவித்தது. உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளிக்காத இந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி உலகின் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஸ்புட்னிக் வி உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகள் உள்ளபோதும் மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. ரஷியாவில் மொத்த மக்கள் தொகையில் 35 சதவிகிதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ரஷிய தலைநகர் மாஸ்கோவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்ததாத 60 வயதிற்கு மேற்பட்டோர் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூகப்பணியாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  

தலைநகர் மாஸ்கோ போல நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நாளை முடிவெடுக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உக்ரைன் மீது படையெடுக்க சொந்த நாட்டு படையினர் மீதே தாக்குதல் நடத்த ரஷியா திட்டம் - அமெரிக்கா தகவல்
உக்ரைன் மீது படையெடுக்க சொந்த நாட்டு படையினர் மீதே தாக்குதல் நடத்த ரஷியா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
2. ரஷியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பின் முதல் பிரிவு பஞ்சாப் செக்டரில் நிலைநிறுத்தம்
ரஷியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பின் முதல் படைப்பிரிவை இந்தியா,பஞ்சாப் செக்டரில் நிலைநிறுத்துகிறது.
3. ரஷியா: அதிநவீன நீர்மூழ்கி ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!
இந்த ஏவுகணை கடலுக்குள்ளே பல மைல் தூரத்தில் மறைந்திருக்கும் நீர்மூழ்கிக் கப்பலை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
4. ஏ.கே.203 துப்பாக்கிகள் வாங்க ஒப்பந்தம்:பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ரஷ்ய மந்திரியுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கட்கிழமை) டெல்லி வருகிறார். இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.
5. ரஷியாவில் பரிதாபம்! கொரோனாவால் அக்டோபரில் அதிக உயிரிழப்பு..!
ரஷியாவில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 75,000 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.