தேசிய செய்திகள்

போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற கைதி ரெயில் சக்கரத்தில் சிக்கி பலி + "||" + Accused run over by train after trying to flee from police custody

போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற கைதி ரெயில் சக்கரத்தில் சிக்கி பலி

போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற கைதி ரெயில் சக்கரத்தில் சிக்கி பலி
போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற கைதி ரெயில் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
மும்பை,

சத்தீஸ்கர் மாநிலம் கன்கீர் மாவட்டம் பானுபிரதாப்பூரை சேர்ந்தவர் ரோஷன் குருபக்‌ஷ் சஞ்சேத் (40). துன்புறுத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தேடப்பட்டு வந்த இவர் கடந்த ஜூன் மாதம் முதல் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். 

இதற்கிடையில், ரோஷன் மும்பையில் பதுங்கி இருப்பதாக கன்கீர் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மும்பை விரைந்த போலீசார் நாசிக்கில் பதுங்கி இருந்து ரோஷனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ரோஷனை மும்பையில் இருந்து ரெயில் மூலம் சத்தீஸ்கருக்கு போலீசார் அழைத்து வந்தனர். ரெயில் நாக்பூர் வந்தபோது போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற ரோஷன் ஓடும் ரெயில் இருந்து கிழே குதித்தார். 

அப்போது, எதிர்பாராத விதமாக ரெயில் சக்கரத்தில் சிக்கிய ரோஷன் உடல் நசுங்கி உயிரிழந்தார். ரோஷன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சாப்பாடுதான் முக்கியம்....!திருமண மண்டபமே தீ பற்றி எரியும் போது பதற்றமின்றி ருசித்த விருந்தினர்
கல்யாண வீட்டில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்த போதும் விருந்துக்கு வந்தவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2. சரியாக பாடம் படிக்காத குழந்தையை கண்டித்த மனைவியை கத்தியால் குத்திய கணவர்...!
குழந்தை சரியாக பாடம் படிக்காததால் கண்டித்த மனைவியை அவரது கணவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3. 20 வயது இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை - அழுகிய நிலையில் சடலம் மீட்பு
பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட 20 வயது நிரம்பிய இளம் பெண்ணின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளப்பட்டுள்ளது.
4. மும்பையில் நேற்று புதிதாக 213 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டிய மாநிலத்தில் தற்போது 9 ஆயிரத்து 799 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5. டெல்லியை தொடர்ந்து மும்பையிலும் காற்றின் தரம் மிகவும் மோசம்!
தலைநகர் டெல்லியை தொடர்ந்து மும்பையிலும் காற்று மாசு மோசமான நிலையை அடைந்துள்ளது.