உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும்” - ரஷ்யா வலியுறுத்தல் + "||" + International community must help Afghanistan Russia insists

“ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும்” - ரஷ்யா வலியுறுத்தல்

“ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும்” - ரஷ்யா வலியுறுத்தல்
ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச சமூகம் நிதியுதவி அளிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதும் தலீபான் பயங்கரவாதிகள் அந்த நாட்டை தங்களின் பிடிக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து ஆப்கானிஸ்தானில் தற்போது தலீபான்களின் தலைமையில் புதிய இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்த அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை. அதே சமயம் ரஷியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தலீபான்களின் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழ்நிலை, ஆட்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க ரஷியாவின் தலைமையில் இன்று(புதன்கிழமை) மாஸ்கோ நகரில் சர்வதேச கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரான், சீனா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளை தலீபான் நிர்வாகிகள் குழு சந்தித்தது. 

இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா பங்கேற்கவில்லை. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், ‘‘ரஷியா நடத்தும் பேச்சுவார்த்தையில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். எனினும் இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாகவும், முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்’’ என கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ரஷ்யாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ரோவ், அமெரிக்கா இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். மேலும் மனிதாபிமான பேரழிவைத் தடுக்க, சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை தலீபான்கள் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் 4.3 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று ரிக்டர் 4.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. புகழ்பெற்ற பச்சைக் கண்கள் ஆப்கான் அகதி பெண் இத்தாலியில் தஞ்சம்
ஷர்பத் குல்லா 1984 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அகதிப் பெண்ணாக சர்வதேசப் புகழ் பெற்றார்.
3. ஆப்கானிஸ்தான்: தலீபான்களின் 100 நாட்கள் ஆட்சி எப்படி உள்ளது...?
அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, வேலையில்லாத் திண்டாட்டத்தால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
4. ஆப்கானிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் சரண்
ஆப்கானிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்தனர்.
5. ஆப்கானிஸ்தானில் டி.வி. நிகழ்ச்சிகளில் தோன்ற பெண்களுக்கு தடை...! தலீபான்கள் உத்தரவு
ஆப்கானிஸ்தானில் டி.வி. நிகழ்ச்சிகளில் பெண்கள் தோன்ற தடை விதித்து தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.