தேசிய செய்திகள்

கேரளாவில் புதிதாக 8,733 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 118 பேர் பலி + "||" + Kerala reports 8,733 new Covid-19 cases, 118 deaths

கேரளாவில் புதிதாக 8,733 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 118 பேர் பலி

கேரளாவில் புதிதாக 8,733 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 118 பேர் பலி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,733 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,733 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48,79,317 ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 9,855 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,79,228 ஆக உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 81,496 ஆக உள்ளது.  தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,202 ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 86,303 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  மாநிலத்தில் அதிகபட்சமாக ஏர்ணாகுளம் மாவட்டத்தில் 1,434 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் புதிதாக 31,096 பேருக்கு கொரோனா: மேலும் 1,182 பேர் பலி
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,096 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் இன்று 51 பேருக்கு கொரோனா; 19 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் தற்போது 376 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. வீட்டில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தாய் - மகன் மரணம்; எரித்து கொல்லப்பட்டனரா?
கேரளாவில் வீட்டில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தாய் - மகன் மரணமடைந்துள்ளனர். இருவரும் எரித்து கொல்லப்பட்டனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. மத்திய பிரதேசம்; 9 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை!
மத்திய பிரதேசத்தில் 9 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. கேரளாவில் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு கட்டாய விடுமுறை - கல்வித்துறை மந்திரி அறிக்கை
கேரளாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என கல்வித்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.