மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி மெகா முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது + "||" + Corona vaccination mega camp is going on in 50 thousand places in Tamil Nadu today

தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி மெகா முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது

தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி மெகா முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது
தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று 6-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இந்த முகாமில் 2-வது தவணை தடுப்பூசி போடுகிறவர்களுக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை,

இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங் கியது. முதலில் சுகாதாரப் பணியாளர்களை தொடர்ந்து தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி ‘டோஸ்’ தடுப் பூசி போடப்பட்டு உள்ளது.


தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது. அதிக பேருக்கு தடுப்பூசி போட வசதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் பல இடங்களில் கூடுதலாக மையங்கள் அமைத்து மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது.

அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

50 ஆயிரம் இடங்கள்

தொடர்ந்து நடைபெற்ற 2-வது முகாமில் 16 லட்சத்து 43 ஆயிரம் பேரும், 3-வது முகாமில் 24 லட்சத்து 85 ஆயிரம் பேரும், 4-வது முகாமில் 17 லட்சத்து 19 ஆயிரம் பேரும், 5-வது முகாமில் 22 லட்சத்து 85 ஆயிரம் பேரும் என மொத்தம் 1 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் பேர் இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் பயன்பெற்று உள்ளனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மது அருந்துபவர் களும், மாமிசம் சாப்பிடுபவர்களும் தடுப்பூசி போடக்கூடாது என்ற தவறான தகவலின் அடிப்படையில் தடுப்பூசி போடாமல் பலர் இருக்கின்றனர். எனவே இந்த வாரம் சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டது.

அந்த வகையில் தமிழகத்தில் 6-வது கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. 50 ஆயிரம் இடங்களில் இந்த முகாமை நடத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

66 லட்சம் தடுப்பூசி

இந்த மெகா தடுப்பூசி முகாமுக்காக கையிருப்பில் இருந்த 66 லட்சம் கொரோனா தடுப்பூசிகள், மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு உள்ளது.

2-வது தவணை தடுப்பூசி போடும் பயனாளிகளுக்கு இந்த தடுப்பூசி முகாம்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு கேட்டு காங்கிரசின் ஆன்லைன் பிரசாரம்
இந்தியாவில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி ஆன்லைன் பிரசாரம் தொடங்கி உள்ளது.
2. கரூரில் 15 பேருக்கு கொரோனா
கரூரில் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
3. தமிழ்நாட்டில் இன்று 731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று புதிதாக மேலும் 731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கரூரில் 12 பேருக்கு கொரோனா
கரூரில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்த இருவருடன் தொடர்பில் இருந்த 500-பேரைக் கண்டறிந்து பரிசோதனை
உலகை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனாவான ‘ஒமைக்ரான்’ இந்தியா வுக்குள் நுழைந்தது.