மாநில செய்திகள்

பண்டிகை நாட்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் + "||" + Avoid crowds on festive days: Chief Minister MK Stalin

பண்டிகை நாட்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்

பண்டிகை நாட்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் பல்வேறு தளர்வுகளுடன் 15.11.2021 வரை நீட்டிக்கப்படுவதாக முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,

கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் பல்வேறு தளர்வுகளுடன் 15.11.2021 வரை நீட்டிக்கப்படுவதாக முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;-

''தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஆணை எண்.658, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 20.10.2021-ன்படி, 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் இன்று (23-10-2021 ) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15.11.2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது. பண்டிகைக் காலங்களில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் மட்டுமே பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 

அதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகை நாட்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும், மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. நம்பர் 1 முதல்-அமைச்சர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்பதே என் இலக்கு -மு.க.ஸ்டாலின்
ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடையும் லட்சியம் தொலைவில் இல்லை என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
2. கரூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜ் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி - மு,க.ஸ்டாலின்
மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
3. விபத்தில் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி-மு.க.ஸ்டாலின் உத்தரவு
சாலையை கடக்கும் போது கார் மோதிய விபத்தில் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
4. முதல் அமைச்சரின் பாதுகாப்பிற்கு செல்லும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு
பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தாமல் மற்ற வாகனங்களுடன் சேர்ந்தே முதல் அமைச்சர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5. கிராம சபை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கிராம சபை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.