கிரிக்கெட்

டி-20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணியை 55 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து + "||" + T20 World Cup England beat West Indies by 55 runs

டி-20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணியை 55 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து

டி-20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணியை 55 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான ‘சூப்பர் 12’ ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 55 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
துபாய்,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் சுற்று நிறைவடைந்த நிலையில் ‘சூப்பர்-12’ சுற்று இன்று தொடங்கியுள்ளது. சூப்பர்-12 சுற்றில் குரூப்-1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும், குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.
 
சூப்பர்-12 சுற்றின் முதல் நாளான இன்று அபுதாபியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 2-வது ‘சூப்பர் 12’ ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. 

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அந்த அணியில் எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறியது.

கிறிஸ் கெய்ல் அடித்த 13 ரன்களே அந்த அணியில் ஒர் வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 14.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. டி-20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி எடுத்த 3-வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். 

இங்கிலாந்து பந்துவீச்சாளர் அடில் ரஷீத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது தவிர மொயீன் அலி, டிமால் மில்ஸ் தலா 2 விக்கெட்டுகளும், கிறீஸ் வோக்ஸ் மற்றும் கிறீஸ் ஜோர்டன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 56 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டி : அழுத்தம்தான் இந்தியாவை தோல்வியில் தள்ளியது -இன்சமாம் உல் ஹக்
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அழுத்தம்தான் இந்தியாவை தோல்வியில் தள்ளியது என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்
2. டி20 உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும்? கெவின் பீட்டர்சன் கணிப்பு
டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணிகள் குறித்து கெவின் பீட்டர்சன் கணித்துள்ளார்.
3. நாளை டி20 உலகக்கோப்பை இறுதி போட்டி : வெல்லப்போவது யார் ...?
நாளை நடைபெறும் டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
4. அரை இறுதியில் தோற்றதால் எத்தகைய வேதனையில் இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும் - இம்ரான் கான்
பாகிஸ்தான் அணியினர் அரை இறுதியில் தோற்றதால் எத்தகைய வேதனையில் இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
5. டி20 உலகக்கோப்பை அரை-இறுதிப் போட்டி; பாகிஸ்தான் 176 ரன்கள் குவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரை-இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி 176 ரன்கள் எடுத்துள்ளது.