தேசிய செய்திகள்

ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதா? சாட்சியாக சேர்க்கப்பட்டவர் குற்றச்சாட்டு + "||" + Cruise drugs case: Witness alleges NCB official demanded Rs 25 cr from Shah Rukh Khan to release his son; agency denies claim

ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதா? சாட்சியாக சேர்க்கப்பட்டவர் குற்றச்சாட்டு

ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதா? சாட்சியாக சேர்க்கப்பட்டவர் குற்றச்சாட்டு
கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பறிமுதல் செய்த வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,

மும்பையில் கோவா மாநிலத்திற்கு சென்ற சொகுசுக் கப்பலில், போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில், பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த வழக்கில், தனியார் புலனாய்வாளர் கே.பி.கோசவி மற்றும் அவரது உதவியாளர் பிரபாகர் செயில் ஆகியோர் சாட்சியாக சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில், சாட்சியமாக சேர்க்கப்பட்ட பிரபாகர் செயில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பிரபாகர் செயில் கூறுகையில், “ போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தன்னிடம் 9 முதல் 10 வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கினர். அதேபோல் என்.சி.பி அதிகாரிகள் மற்றும் மேலும் சிலரும்  ஆர்யன் கான் வழக்கு தொடர்பாக அவரது தந்தை ஷாருக்கானிடம் ரூ.25 கோடி  பேரம் பேசினர்” என்றார்.  பிரபாகர் செயிலின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். 

விசாரணை அமைப்பின் பெயரை கெடுப்பதற்காக இந்த குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அதனால், அது போன்ற குற்றச்சாட்டுகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. போதைப்பொருள் வழக்கு: என்.சி.பி அதிகாரி சமீர் வான்கடே பணியிட மாற்றம்
மும்பை - கோவா சொகுசு கப்பலில் கடந்த மாதம் 2-ந் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
2. ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
3. போதைப்பொருள் வழக்கு: 3-வது கட்ட விசாரணைக்கு அனன்யா பாண்டே ஆஜராகவில்லை
ஆர்யன் கான், இளம் இந்தி நடிகை அனன்யா பாண்டே போதைப்பொருள் தொடர்பாக வாட்ஸ்-அப் மூலம் சாட்டிங் செய்தது தெரியவந்தது.
4. போதைப்பொருள் வழக்கில் எனது வாட்ஸ்-அப் உரையாடல் தவறாக சித்தரிப்பு: ஆர்யன் கான்
சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார்.
5. மும்பை சிறையில் மகனை சந்தித்தார் ஷாருக்கான்
சிறையில் இருக்கும் தனது மகனை பார்ப்பதற்காக நடிகர் ஷாருக்கான் இன்று ஆர்தர் ரோடு சிறைக்குச் சென்றுள்ளார்.