தேசிய செய்திகள்

உ.பி.யில் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ சேவை இலவசம் - காங்கிரஸ் + "||" + Eye on polls, Priyanka Gandhi promises free treatment up to Rs 10 lakh in UP, takes dig at Yogi govt

உ.பி.யில் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ சேவை இலவசம் - காங்கிரஸ்

உ.பி.யில் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ சேவை இலவசம் - காங்கிரஸ்
உத்தரபிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ சேவை இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
லக்னோ,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2022) தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன.

இதற்கிடையில், உத்தரபிரதேசத்தில் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு கட்சிகள் மக்களை கவரும் நோக்கில் வாக்குறுதிகளை அறிவிக்கத்தொடங்கியுள்ளன.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ சேவை இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கோரோனா வைரஸ் தொற்றின் போது உத்தரபிரதேசத்தில் சுகாதார அமைப்பின் மோசமான நிலையை அனைவரும் பார்த்தனர். இது தற்போதைய உத்தரபிரதேச அரசின் (பாஜக) அக்கறையின்மை மற்றும் புறக்கணிப்பின் விளைவாகும். 

தேர்தல் அறிக்கை கமிட்டியின் ஒப்புதலுடன் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் அமைத்த உடன் எந்த நோய்க்கும் பொதுமக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். பொதுமக்களுக்கு 10 லட்ச ரூபாய் வரையிலான மருத்துவ செலவை அரசே (காங்கிரஸ்) ஏற்கும்’ என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரசில் இருந்து யார் விலகினாலும் கவலையில்லை, சேர்ந்தாலும் கவலையில்லை - அசோக் கெலாட்
காங்கிரசில் இருந்து யாரேனும் விலகினாலும் கவலையில்லை, காங்கிரசில் சேர்ந்தாலும் கவலையில்லை என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.
2. உத்தர பிரதேச முதல் கட்ட தேர்தல்; காங். கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு
உத்தர பிரதேச முதல் கட்ட தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
3. பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்: முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
4. காங்கிரஸ் பாதயாத்திரைக்கு தடை விதிக்க உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல்
காங்கிரஸ் பாதயாத்திரைக்கு தடை விதிக்க உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
5. ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக விரோத நடவடிக்கை: காங்கிரஸ் கடும் கண்டனம்
ஜம்மு காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது ஜனநாயக விரோத நடவடிக்கை என காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.