தேசிய செய்திகள்

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; ஜனாதிபதியை சந்தித்து சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல் + "||" + Chandrababu Naidu meets President Kovind, seeks President's Rule in Andhra Pradesh

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; ஜனாதிபதியை சந்தித்து சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; ஜனாதிபதியை சந்தித்து சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்
ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்தார்.
ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். கட்சியின் தொண்டர்கள் கடந்த 19-ந்தேதி மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் அலுவலகங்கள் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “மாநில மக்கள் தங்களுக்கு அரசியலமைப்பு சட்டப்படி வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு தினசரி அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். அரசால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதம், ஜனநாயகம் மற்றும் அரசின் கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில் கற்பனை செய்ய முடியாத உச்சத்தை எட்டியுள்ளது” என்றார்.

மேலும் “ஒய்.எஸ்.ஆர். ஆளும் மாநில அரசு அரசியலமைப்பை தொடர்ந்து மீறுவதை பார்த்து, மத்திய அரசு அமைதியாக இருந்தால், தேசத்தின் சிதைவுக்கு விதைகளை விதைப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளன. எனவே ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் இன்று மேலும் 14,440 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2. ஆந்திராவின் அனைத்து மாவட்டங்களிலும் விமான நிலையங்கள்... முதல்-மந்திரியின் திட்டம்!
ஆந்திராவின் அனைத்து மாவட்டங்களிலும் விமான நிலையங்கள் அமைக்க முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3. ஆந்திராவில் இன்று மேலும் 10,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
4. ஆந்திரா, தெலுங்கானாவில் புத்தாண்டையொட்டி ரூ.296 கோடிக்கு மது விற்பனை
புத்தாண்டையொட்டி ஆந்திரா, தெலுங்கானாவில் ரூ.296 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
5. துருக்கி காதலியை இந்துமத முறைப்படி திருமணம் செய்த ஆந்திர இளைஞன்...!
துருக்கியை சேர்ந்த தனது காதலியை இந்து மத முறைப்படி ஆந்திராவை சேர்ந்த இளைஞன் திருமணம் செய்துள்ளார்.