தேசிய செய்திகள்

டெல்லி: அடுக்குமாடி வீட்டில் தீ விபத்து - 4 பேர் பலி + "||" + Four people have died in a fire at a three-storey building in delhi

டெல்லி: அடுக்குமாடி வீட்டில் தீ விபத்து - 4 பேர் பலி

டெல்லி: அடுக்குமாடி வீட்டில் தீ விபத்து - 4 பேர் பலி
டெல்லியில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
டெல்லி,

தலைநகர் டெல்லியின் பழைய சீமாபுரி பகுதியில் 3 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வீடு உள்ளது. இந்நிலையில், அந்த அடுக்குமாடி வீட்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

இதனால், வீட்டின் 3-வது மாடியில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு அதிகாலை தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து தீவிபத்து ஏற்பட்ட வீடு உள்ள பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் வீட்டில் பரவிய தீயை அணைத்தனர். 

ஆனால், தீயணைப்பு வருவதற்கு முன்னர் வீட்டின் 3-வது மாடியில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேரும் தீ விபத்தில் சிக்கி உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் மேலும் 23 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் காற்று மாசு; மிக மோசமான நிலையில் காற்றின் தரம்
டெல்லியின் ஒரு சில பகுதிகளில் இன்று காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ என்ற நிலையில் இருந்து வருகிறது.
3. டெல்லியில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சி; 14 எதிர்கட்சிகள் புறக்கணிப்பு
டெல்லியில் இன்று நடைபெறும் அரசியலமைப்பு தின நிகழ்ச்சியை 14 எதிர்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
4. டெல்லியில் இன்று 29 பேருக்கு கொரோனா; 45 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் தற்போது 309 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5. டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரிப்பு
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் தொடர்ந்து நீடித்து வருகிறது.