சினிமா செய்திகள்

ரஜினி நடித்த 'அண்ணாத்த' படத்தின் டிரைலர் வெளியானது... + "||" + 'Annatha' trailer released

ரஜினி நடித்த 'அண்ணாத்த' படத்தின் டிரைலர் வெளியானது...

ரஜினி நடித்த 'அண்ணாத்த' படத்தின் டிரைலர் வெளியானது...
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 'அண்ணாத்த' திரைப்படம் உருவாகியுள்ளது. விஸ்வாசம் படத்திற்கு பிறகு டைரக்டர்  சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார்.  இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். டி. இமான் இசையமைத்துள்ளார். 

அண்ணன், தங்கை பாசப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வருகிற நவம்பர் 4 ந்தேதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கெனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனையடுத்து, ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியான கீர்த்தி சுரேஷ் படத்தின் டிரைலர்
ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள குட்லக் சகி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை குதுகலப்படுத்தி இருக்கிறது.
2. சிங்கத்தை கொல்ல முடியாது - வீரமே வாகை சூடும் டிரைலர்
விஷால் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து நடித்திருக்கும் வீரமே வாகை சூடும் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
3. விஷாலின் 'வீரமே வாகை சூடும்' டிரைலர் வெளியானது..!
நடிகர் விஷால் நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
4. அருள்நிதியின் டி-பிளாக் டிரைலர் வெளியானது
நடிகர் அருள்நிதியின் 15-வது படமான டி-பிளாக் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
5. போயஸ் கார்டனில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் பொங்கல் வாழ்த்து..!
சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.