சினிமா செய்திகள்

அண்ணாத்த திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு + "||" + Annatha film banned from being released illegally - Chennai high Court

அண்ணாத்த திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

அண்ணாத்த திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம்  'அண்ணாத்த'. டைரக்டர்  சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார்.  இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். டி. இமான் இசையமைத்துள்ளார். 

'அண்ணாத்த' திரைப்படம் அண்ணன், தங்கை பாசப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற நவம்பர் 4 ந்தேதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. 

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் சார்பில் அண்ணாத்த  படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.  

அந்த மனுவில்,  இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சுமார் 3,500 சட்ட விரோத இணையதளங்களில் படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது. படத்தை இணையதளங்களில் வெளியிட்டால் பெரிய நஷ்டம் ஏற்படும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு  நீதிபதி ஜெயச்சந்திரன், அண்ணாத்த திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து இணையதளங்கள் மற்றும் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. போயஸ் கார்டனில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் பொங்கல் வாழ்த்து..!
சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
2. சென்னை மாநகராட்சி:மண்டலம் வாரியாக பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு அறிவிப்பாணை ரத்து
சென்னை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
3. தெய்வமே என ரசிகர்கள் கோஷம்...! நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து
சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினி ரசிகர்கள் அவர் வீட்டின் முன்பு திரண்டனர்.
4. ரஜினிகாந்திற்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து ரசிகர்களை மகிழ்விக்க மனதார வாழ்த்துவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
5. நடிகர் ரஜினிகாந்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 72-வது வயதில் இன்று அடியெத்து வைத்துள்ள நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.