மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் தீபாவளியன்று இறைச்சி கடைகளை திறக்க அனுமதி - தமிழ்நாடு அரசு + "||" + Permission to open meat shops across Tamil Nadu on Diwali Government of Tamil Nadu

தமிழ்நாடு முழுவதும் தீபாவளியன்று இறைச்சி கடைகளை திறக்க அனுமதி - தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு முழுவதும் தீபாவளியன்று இறைச்சி கடைகளை திறக்க அனுமதி - தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு முழுவதும் தீபாவளியன்று இறைச்சி கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை,

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதே நாளன்று மகாவீரர் மோட்சம் பெற்ற நாளான “மகாவீர் நிர்வான் தினம்” ஜெயின் மதத்தினரால் கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தன்று தமிழகத்தில் இறைச்சி கடைகளை மூடி வைக்க உத்தரவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று மகாவீர் நிர்வான் தினம் வருவதால், சென்னையில் நவம்பர் 4 ஆம் தேதி இறைச்சி கடைகளை திறக்க சென்னை மாநகராட்சி சார்பில் தடை விதிக்கப்பட்டது. பொதுவாகவே தீபாவளி பண்டிகையன்று இறைச்சிக் கடைகளில் விற்பனை அதிகரித்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பால் பொதுமக்களிடையே பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. 

இந்த நிலையில் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அன்று இறைச்சி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும், பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையை பரிசீலித்தும் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே சமயம் ஜெயின் மத வழிபாட்டுத் தளங்களை சுற்றியுள்ள இறைச்சிக் கடைகளையும், ஜெயின் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைச் சுற்றியுள்ள இறைச்சிக் கடைகளையும் திறக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. குடியரசு தின விழா; 24 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி
டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 24 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட உள்ளது.
2. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி - பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு போட்டியை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
3. 8 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு: கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்த மத்திய அரசு கடிதம்
தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்திருப்பதால் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி கடிதம் எழுதி உள்ளது.
4. மராட்டியத்தில் நஞ்சான உணவை சாப்பிட்ட 31 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
மராட்டியத்தின் புனே நகரில் உள்ள பயிற்சி மைய மாணவிகள் 31 பேர் நஞ்சான உணவை சாப்பிட்டதில் உடல்நல பாதிப்பு அடைந்து உள்ளனர்.
5. சென்னை போர் நினைவுச்சின்னத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், சென்னை போர் நினைவுச்சின்னம் 4 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்படும் என்று ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் கூறினார்.